இந்த தந்திரம் அறிந்தால் வெற்றி வாய்ப்பு உங்களைத் தேடி.....If you know this trick, the chance of success is looking for you

If you know this trick, the chance of success is looking for you

இந்த தந்திரம் அறிந்தால் வெற்றி வாய்ப்பு உங்களைத் தேடி!!




🎯 நீங்கள் வேலையை தேட ஆரம்பிக்கும் பொழுது, நீங்கள் பணிபுரிய விரும்பும் நிறுவனங்களின் கணக்கை பட்டியலிட்டுக் கொள்ளுங்கள்.

🎯 நீங்கள் பணிபுரிய விரும்பும் நிறுவனங்களின் வேலை வாய்ப்பு வரும் வரை காத்திருக்காதீர்கள்.

🎯 உங்களுக்கு வாய்ப்பு கிடைத்தால் அந்த நிறுவனங்களில் பணிபுரிபவருடன் நட்புறவை வளர்த்துக் கொள்ளுங்கள். அவ்வாறு செய்வதன் மூலம் அங்கே பணிபுரியும் சூழலை நீங்கள் அறிந்துக் கொள்ளலாம்.

🎯 உற்பத்திப் பொருள்கள், ஆண்டு வருமானம், எதிர்கால விரிவுத் திட்டம், அவர்களுடைய போட்டியாளர்கள், அவர்களது செயல்முறைகள் ஆகியவற்றை ஆராய்ந்து கொள்ளுங்கள்.

🎯 அவற்றை ஆராய்ந்ததோடு இல்லாமல் உங்களது யோசனைகளை சமூக வலைத்தளங்களின் மூலம் அவர்களது பக்கத்தில் பகிருங்கள்.

🎯 அப்பொழுதுதான் அந்த நிறுவனத்தில் வேலைவாய்ப்பு தகவல்கள் வரும்பொழுது, உங்களது விண்ணப்பமானது மற்ற போட்டியாளர்களை விட முன்னனியில் இருக்கும்.

🎯 முன்பெல்லாம் பணியமர்த்தும் மேலாளர்களிடம் நட்புறவு வளர்த்துக் கொண்டு வேலை பெறுவது ஒரு தந்திரமாக இருந்தது. ஆனால் அவையெல்லாம் இக்கால கட்டத்திற்கு பொருந்தாது.

🎯 ஆனால் அதையும் தாண்டி, அவர்களை விட பெரிய நிபுணர்களுடன் நீங்கள் சமூக வலைத்தளங்கள் மூலம் நீங்கள் நட்புறவை வளர்த்துக் கொள்ளுங்கள்.

🎯 அதற்காக அவர்களை நச்சரித்து விடாதீர்கள். சரியான வாய்ப்பும் தலைப்பும் கிடைக்கும் பொழுதுதான் அவர்களுடனான நட்பை நீங்கள் மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.

Comments

Popular posts from this blog

React Hook Form: The complete guide

Visual Studio Code settings For Developers

Some useful links